திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் 50 ஆயிரம் எக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது.
இந்த பாதிப்புகளை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். நேற்று இரவு திருவாரூர் வரும் வழியில் சொரக்குடி பாதுகாப்பு முகாமில் தங்கி இருந்தவர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அவர்களிடம் மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு பழம், போர்வை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்
இதனைத் தொடர்ந்து இன்று காலை திருவாரூர் அருகே அம்மையப்பன், காவனூர், கணிதம், கமலாபுரம் உள்ளிட்ட இடங்களில் பாதிப்புகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நேரு மதிவாணன், தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், முன்னாள் எம்.பி. விஜயன், முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து நன்னிலம் ஒன்றியம் சொரக்குடி கிராமத்தில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அரிசி, காய்கறி, போர்வை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
Related Tags :
Next Story