தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா மறைவு: முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா உடல்நலக் குறைவால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 86.
இந்த நிலையில் தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அமைச்சரவையில் வீட்டுவசதி துறை அமைச்சராகவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமையில் எதிர்கட்சித் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றி, இருவரது அன்பைப் பெற்ற திரு.S.R.ராதா அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து வேதனை அடைந்தேன். திரு.S.R.ராதா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story