முதன்மை கல்வி அதிகாரிகள் இடமாற்றம் - பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு
பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் முதன்மை கல்வி அதிகாரிகள் இடமாற்றம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை தொடக்கக்கல்வி இயக்கக துணை இயக்குனர் (நிர்வாகம்) ஆர்.அறிவழகன், திருச்சி முதன்மை கல்வி அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி க.குணசேகரன், சென்னை தொடக்கக்கல்வி இயக்கக துணை இயக்குனராக (நிர்வாகம்) மாற்றப்பட்டிருக்கிறார்.
காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எஸ்.சத்தியமூர்த்தி, ராமநாதபுரம் முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். சென்னை பள்ளிக்கல்வி இயக்கக துணை இயக்குனர் (மின் ஆளுமை) பி.ஏ.ஆறுமுகம், காஞ்சீபுரம் முதன்மை கல்வி அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். அரியலூர் முதன்மை கல்வி அதிகாரி சி.முத்துகிருஷ்ணன், சென்னை பள்ளி கல்வி இயக்கக துணை இயக்குனராக (மின் ஆளுமை) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story