மாநில செய்திகள்

பவானிசாகர் அணையின் நீர்வரத்து உயர்வு + "||" + Rise in water level of Bhavani Sagar Dam

பவானிசாகர் அணையின் நீர்வரத்து உயர்வு

பவானிசாகர் அணையின் நீர்வரத்து உயர்வு
பவானிசாகர் அணையின் நீர்வரத்து 1,277 கன அடியில் இருந்து 3,194 கன அடியாக உயர்ந்துள்ளது.
பவானிசாகர், 

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை கொண்ட பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.

இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் அணைக்கு வருகிறது.

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94.87 அடியாக உள்ளது. அணையின் நீர்வத்து நேற்று 1,277 கன அடியாக இருந்த நிலையில் இன்று 3,194 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1,250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது பவானிசாகர் அணையில் 24.8 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பவானிசாகர் அணை நீர்வரத்து நிலவரம்
இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.53 அடியாக உள்ளது.
2. பவானிசாகர் அணை நீர்வரத்து நிலவரம்
இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.45 அடியாக உள்ளது.
3. பவானிசாகர் அணை நீர்வரத்து நிலவரம்
இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94.11 அடியாக உள்ளது.
4. பவானிசாகர் அணை நீர்வரத்து நிலவரம்
இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.21 அடியாக உள்ளது.
5. பவானிசாகர் அணையின் நீர்வரத்து நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்வரத்து 1,277 கன அடியாக உள்ளது.