“மும்பையில் சிவாஜியை கொண்டாடுவது போல், தமிழ்நாட்டில் நாம் மன்னர்களை கொண்டாடுவதில்லை” - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து
ராஜ ராஜ சோழன் உள்ளிட்ட மன்னர்கள் புரிந்த சாதனைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மதுரை,
மன்னர் ராஜராஜ சோழனின் வரலாற்று பெருமைகளை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கக் கோரி தியாகராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மராட்டிய மன்னர் சிவாஜியை மும்பையில் கொண்டாடுவது போல், தமிழ்நாட்டில் நாம் மன்னர்களை கொண்டாடுவதில்லை என்றனர். ஆயிரம் ஆண்டு பழமையான தஞ்சை பெரிய கோவிலை உருவாக்கிய ராஜ ராஜ சோழன் உள்ளிட்ட மன்னர்கள் கடல் கடந்து நாடுகளை வெற்றி கொண்டு பல சாதனை புரிந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மனுதாரரின் கோரிக்கை குறித்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
Related Tags :
Next Story