புறநகர் ரெயிலில் கல்லூரி மாணவர்கள் பயணிக்க அனுமதிக்க வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்


கமல்ஹாசன் ( Photo: PTI)
x
கமல்ஹாசன் ( Photo: PTI)
தினத்தந்தி 9 Dec 2020 2:24 PM IST (Updated: 9 Dec 2020 2:24 PM IST)
t-max-icont-min-icon

புறநகர் ரெயிலில் கல்லூரி மாணவர்கள் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

கொரோனா நோய்த்தொற்று பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் மின்சார ரெயில் சேவை, கடந்த மாதம்  மீண்டும் துவங்கியது. எனினும், மின்சார ரெயிலில் அனைத்து தரப்பினரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட வில்லை.

அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், அத்தியாவசியப் பணிக்குச் செல்பவர்கள் மட்டுமே பயணிக்கின்றனர். தற்போது கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பெண்கள், குழந்தைகள் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களும் பயன்படுத்தவும் அனுமதி இல்லை.  இதனால் புறநகரில் இருந்து நகருக்குள் உள்ள கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், புறநகர் ரயில்களில் மாணவர்கள் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் வைத்துள்ளார். இது தொடர்பாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-  

இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story