மசாஜ் சென்டரில் விபசாரம் ‘டிக்-டாக்’ பிரபலம் சூர்யா கைது


மசாஜ் சென்டரில் விபசாரம் ‘டிக்-டாக்’ பிரபலம் சூர்யா கைது
x
தினத்தந்தி 10 Dec 2020 12:49 AM IST (Updated: 10 Dec 2020 12:49 AM IST)
t-max-icont-min-icon

டிக்டாக்கில் பிரபலமான சூர்யா (வயது 34), என்ற பெண், அவருக்கு உதவியாக இருந்த தினேஷ் (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, 

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள காம்ப்ளக்சில் உள்ள மசாஜ் சென்டரில் திருச்சி தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அதன் உரிமையாளர் டிக்டாக்கில் பிரபலமான சூர்யா (வயது 34), என்ற பெண், அவருக்கு உதவியாக இருந்த தினேஷ் (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுபோல தில்லைநகர் பகுதியில் உள்ள மசாஜ் சென்டரிலும் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி உல்லாசம் அனுபவிக்க வந்த 8 ஆண்களை கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அழகிகள் 12 பேரும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
1 More update

Next Story