மாநில செய்திகள்

தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக புதிய கட்டடத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் + "||" + Chief Minister Palanisamy lays foundation for new building of Tamil Nadu University of Music and Fine Arts

தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக புதிய கட்டடத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்

தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக புதிய கட்டடத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள புதிய கட்டடத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சென்னை, 

சென்னையில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி துவங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் ரூ.14.85 கோடி மதிப்பில் அமைய உள்ள கட்டடதிற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.