தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வருகிற 13ந்தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை
சென்னையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வருகிற 13ந்தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன. தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, பிரசார பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விசயங்களிலும் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.வின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்பொழுது, தமிழக சட்டசபைக்கான 234 தொகுதிகளிலும் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம் என கூறினார்.
ஜனவரி மாதம் விஜயகாந்த் தலைமையில் செயற்குழு கூட்டம் கூட்டப்படும். அதில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார். இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் வருகிற 13ந்தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களை பற்றி ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story