வரும் 20-ம் தேதி திமுக மாவட்ட, மாநகர கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்


வரும் 20-ம் தேதி திமுக மாவட்ட, மாநகர கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2020 1:06 PM IST (Updated: 12 Dec 2020 1:06 PM IST)
t-max-icont-min-icon

வரும் 20-ம் தேதி திமுக மாவட்ட, மாநகர கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

வரும் 20-ம் தேதி திமுக மாவட்ட, மாநகர கழக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என்று திமுக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக திமுக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 20-12-2020 அன்று, மாவட்ட/மாநகர/ஒன்றிய/நகர/பகுதி/பேரூர்க் கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Next Story