கந்து வட்டி கொடுமை: விழுப்புரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை


கந்து வட்டி கொடுமை: விழுப்புரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 14 Dec 2020 10:59 AM IST (Updated: 14 Dec 2020 10:59 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே கந்து வட்டி கொடுமையால் தச்சு தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே வளவனூரை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்  (38). தச்சு தொழிலாளி இவர் மரப்பட்டறை வைத்து நடத்தி வந்தார்.  இன்று  காலை வெகுநேரம் ஆகியும் மோகன் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்தனர். கதவை உடைத்து பார்த்தபோது மோகன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து அறிந்த வளனூர் காவல்துறையினர் சமபவ இடத்துக்கு  விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மோகன் கடன் சுமையால் அவதிப்பட்டு வந்தார் என கூறப்படுகிறது. கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் நேற்று  இரவு மோகன் தனது மனைவி விக்னேஸ்வரி மற்றும் 3 குழந்தைகளுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.

Next Story