ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார் - மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்


ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார் - மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்
x
தினத்தந்தி 15 Dec 2020 6:16 PM IST (Updated: 15 Dec 2020 6:16 PM IST)
t-max-icont-min-icon

ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி,

மக்கள் நீதிமய்யம் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டிசம்பர் 13ம் தேதி முதல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவில்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்ட கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, “ மக்கள் நலனுக்காக ரஜினியுடன் இணைந்து செயல்படுவேன். நானும் ரஜினியும் இன்னுமும் நட்பை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். அரசியலில் அவரது பயணமும் எனது பயணமும் ஒன்றுதான். ஆனால் அவர் கொள்கை என்ன என்று முழுமையாக சொல்லவில்லை. அதனால் அவரது கொள்கையை சொல்லட்டும். மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் நானும் ரஜினியும் எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து ஒன்றிணைய தயாராக உள்ளோம்” என்று கூறினார்.

Next Story