தமிழகம் முழுவதும் 127 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை


தமிழகம் முழுவதும் 127 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
x
தினத்தந்தி 16 Dec 2020 5:46 PM IST (Updated: 16 Dec 2020 5:46 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் 127 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது.

சென்னை, 

கடந்த சில நாட்களாக கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பல்வேறு அரசு அலுவலகங்களில் சோதனைகளை நடத்தி வருகிறது.

இதன்படி தமிழகம் முழுவதும் 127 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது. அதில் கடந்த 75 நாட்களில் ரூ.6.96 கோடி கணக்கில் காட்டாத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்கியது தொடர்பாக தமிழகத்தில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story