அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இல்லை - கே.பி.முனுசாமி


அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இல்லை - கே.பி.முனுசாமி
x
தினத்தந்தி 4 Feb 2021 12:56 PM GMT (Updated: 4 Feb 2021 12:56 PM GMT)

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இல்லை என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டிஜிபியிடம் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், அதிமுக மூத்த நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர்.அமைச்சர்களுடன், கே.பி.முனுசாமி, மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் மனு அளித்தனர்.

அதன் பின்னர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த அவருக்கு உரிமை இல்லை. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவிர மற்றவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது.

உறுப்பினராக இருந்தாலும், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுபிக்க வேண்டும் என்பது அதிமுக சட்ட விதி. அதிமுக சட்ட விதிகளின் படி, உறுப்பினர் அட்டையை சசிகலா புதுபிக்கவில்லை. எனவே சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை. உறுப்பினராக இல்லாதவரை எதற்காக கட்சியிலிருந்து நீக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story