ஜூன் 08: சென்னையில் இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்


ஜூன் 08: சென்னையில் இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்
x
தினத்தந்தி 8 Jun 2021 1:26 AM GMT (Updated: 2021-06-08T06:56:27+05:30)

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 96.23 ரூபாய், டீசல் லிட்டருக்கு 90.38 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு, பெட்ரோல், டீசல் விலை பயணித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96-ஐ கடந்தும், டீசல் கடந்த 1-ந்தேதி ரூ.90-ஐ கடந்தும் விற்பனை ஆனது. அதன் தொடர்ச்சியாக விலை ஏறுமுகத்திலேயே இருந்து வந்தது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 96.23 ரூபாய், டீசல் லிட்டர் 90.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.

Next Story