மாநில செய்திகள்

34 மாவட்டங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு- பல்லாயிரக்கணக்கானோர் ஏமாற்றம் + "||" + Shortage of vaccine in 34 districts Tens of thousands disappointed

34 மாவட்டங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு- பல்லாயிரக்கணக்கானோர் ஏமாற்றம்

34 மாவட்டங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு- பல்லாயிரக்கணக்கானோர் ஏமாற்றம்
மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வந்தால் மட்டுமே இந்த மாவட்டங்களில் இனி தடுப்பூசி போட முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை

கொரோனாவை வெல்லும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என்கிற விழப்புணர்வு பிரசாரமும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சில வாரங்களாகவே மக்கள் மத்தியில் தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 

18 வயதில் இருந்து 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளுக்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் முழுமையாக தீர்ந்துவிட்டன. இதனால் பல இடங்களில்  சில நாட்கலாக ஊசி போட சென்ற பலர்  பலர் ஊசி இல்லை  என திரும்பி வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை. மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வந்தால் மட்டுமே இந்த மாவட்டங்களில் இனி தடுப்பூசி போட முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 97 லட்சத்து 35 ஆயிரத்து 420 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 3 லட்சம் தடுப்பூசிகள் வீணாகி உள்ளன. தற்போது சென்னை மற்றும் கோவையில் மட்டுமே சில இடங்களில் தடுப்பூசி உள்ளது. 22 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் இருக்கிறது.

மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வநத உடன் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.

தடுப்பூசி முற்றிலுமாக இல்லாமல் இருக்கும் நிலையில் 34 மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் ஊசி போட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நேற்று பல இடங்களில் ஊசி போட சென்ற பலர் திரும்பச் சென்ற நிலையில் இன்றும் 2-வது நாளாக தடுப்பூசி கிடைக்காமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்த மாதமே கொரோனா 3 ஆம் அலை துவங்கி விடும்? ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
கணித அடிப்படையில் நடத்தப்பட்ட அவர்களது ஆய்வில், 3 ஆவது அலை துவங்கும் போது தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்க தடை
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் இன்று முதல் ஆகஸ்டு 9-ந்தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை
3. இளம் பெண் டாக்டருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு
மும்பையைச் சேர்ந்த இளம் பெண் டாக்டர் ஒருவருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: கேரளாவில் சனி -ஞாயிறு 2 நாட்கள் முழு ஊரடங்கு
கேரள அரசு கொரோனா வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது; சனி -ஞாயிறு 2 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. ஜூலை 27: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.