மருத்துவப் படிப்பில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு: தமிழக அரசு நாளை ஆலோசனை


மருத்துவப் படிப்பில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு: தமிழக அரசு நாளை ஆலோசனை
x
தினத்தந்தி 9 Jun 2021 4:08 PM GMT (Updated: 9 Jun 2021 4:13 PM GMT)

மருத்துவ படிப்புகளில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு 2.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது.

சென்னை,

மருத்துவப் படிப்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்கெனவே 7.5% உள் ஒதுக்கீடு முறை அமலில் உள்ளது.

இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளிக்கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். 


இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நாளை மாலை 4:30மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story