தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் - முதல்-அமைச்சருக்கு ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை


தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் - முதல்-அமைச்சருக்கு ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Jun 2021 1:12 PM GMT (Updated: 2021-06-11T18:42:09+05:30)

தடுப்பூசி விவகாரம் தொடர்பாக பிரதமரை முதல்-அமைச்சர் சந்திக்க வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக சில நாட்களாக தடுப்பூசி போடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், 

தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு ஆமை வேகத்தில் சென்றுகொண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன 

தமிழகத்தை விட பின் தங்கிய பீகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் 24% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 சதவிகித மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெறுவதில் தமிழ்நாட்டில் சுணக்கம் இருப்பதாக தெரிகிறது. எனவே முதல்-அமைச்சர்  பிரதமர் அவர்களை நேரில்சந்தித்து விளக்கி இந்தாண்டு இறுதிக்குள் தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story