தமிழகத்திற்கு இன்று ஒரே நாளில் 8 லட்சம் தடுப்பூசிகள் வருகை


தமிழகத்திற்கு இன்று ஒரே நாளில் 8 லட்சம் தடுப்பூசிகள் வருகை
x

தமிழகத்திற்கு இன்று ஒரே நாளில் 8 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது.

சென்னை,

கொரோனாவை தடுப்பூசியால் மட்டுமே தடுக்க முடியும் என்று உலக நாடுகள் நம்புகின்றன. அதன் காரணமாக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டே தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.

தமிழகத்தை பொறுத்துவரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் 1000 தடுப்பூசிகள் மட்டுமே இருந்தன. இந்நிலையில் மராட்டிய மாநிலம் புனேவிலிருந்து மேலும் 6.99 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்தடைந்தன.

காலையில் 1 லட்சத்து 25 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தடைந்தது. மாலையில் 7 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்தது. மத்திய அரசு தொகுப்பிலிருந்து சுமார் 4 லட்சம் தடுப்பூசிகளும், தமிழக அரசு கொள்முதல் செய்த 4 லட்சம் தடுப்பூசிகளும் வந்தடைந்தது.  தமிழகத்திற்கு ஒரே நாளில் 8 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளது.

Next Story