தமிழகத்தில் 15,108 பேருக்கு கொரோனா: இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு


தமிழகத்தில் 15,108 பேருக்கு கொரோனா: இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 Jun 2021 2:08 PM GMT (Updated: 2021-06-12T19:38:36+05:30)

தமிழகத்தில் கோவை, சென்னையில் தொடர்ந்து பாதிப்பு குறைகிறது. இன்று ஒரே நாளில் 15,108 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலத்தில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது அந்த பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்புகள் மட்டும் தினசரி ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

1,82,878 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில்  தமிழகத்தில் 15,105 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 3 பேர் என மொத்தம் 15,108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்கனவே 1,064 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 989  பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 12 வயதிற்குட்பட்ட 605 சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத 101 பேர் உயிரிழந்தனர்.  அரசு மருத்துவமனைகளில் 244 பேரும், தனியர் மருத்துவமனைகளில் 130 பேரும் உயிரிழந்தனர்.  கொரோனாவால் மேலும் 374 பேர் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 29,280 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் மட்டும் மேலும் 73 பேர் உயிரிழந்தனர். 

கொரோனாவில் இருந்து மேலும் 27,463 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 21,48,352 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,62,073 ஆக உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story