24 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்


24 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்
x
தினத்தந்தி 13 Jun 2021 2:12 PM GMT (Updated: 13 Jun 2021 3:19 PM GMT)

தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட கலெக்டர்கள் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் 24 மாவட்டங்களுக்குப் புதிய கலெக்டர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய ஆட்சியர்களாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், அவர்கள் முன்பு வகித்த பதவி குறித்த விவரம்:

1. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குநர் கவிதா ராமு மாற்றப்பட்டு, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய திட்ட இயக்குநர் மற்றும் இணை மேலாண்மை இயக்குநர் கோபால சுந்தரராஜ் மாற்றப்பட்டு, ராமநாதபுர மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. ராமநாதபுர மாவட்ட கலெக்டராக பதவி வகிக்கும் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாற்றப்பட்டு, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. வேளாண்துறை சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநராகப் பதவி வகிக்கும் கே.வி.முரளிதரன் மாற்றப்பட்டு, தேனி மாவட்ட கலெக்டராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

5. தமிழ்நாடு சாலைத் துறை திட்ட இயக்குநர் அருண்ராஜ் மாற்றப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. பொதுத் துறை இணைச் செயலர் (புரோட்டோகால்) பதவி வகிக்கும் ராகுல் நாத் மாற்றப்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

7. தமிழ்நாடு சிமெண்ட் கழக மேலாண் இயக்குநராகப் பதவி வகிக்கும் ஆர்த்தி மாற்றப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (சுகாதாரம்) பதவி வகித்து மாற்றப்பட்ட ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. டாஸ்மாக் மேலாண் இயக்குநர் பதவி வகித்து மாற்றப்பட்ட மோகன், விழுப்புரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. சென்னை மாநகராட்சி மத்திய வட்டார இணை ஆணையராகப் பதவி வகிக்கும் ஸ்ரீதர் மாற்றப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

11. கோவை மாநகர ஆணையராகப் பதவி வகித்து மாற்றப்பட்ட குமாரவேல் பாண்டியன், வேலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

12. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநராகப் பதவி வகித்த முருகேஷ் மாற்றப்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

13. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநர் அமர் குஷ்வாஹ் மாற்றப்பட்டு, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

14. விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஷ்ரேயா சிங் மாற்றப்பட்டு, நாமக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

15. மதுரை மாநகராட்சி ஆணையராகப் பதவி வகித்து மாற்றப்பட்ட விசாகன், திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

16. தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் மாற்றப்பட்டு, கோவை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

17. மின்வாரிய விஜிலென்ஸ் (டான்ஜெட்கோ) இணை மேலாண்மை இயக்குநராகப் பதவி வகித்த வினித் மாற்றப்பட்டு, திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

18. இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பதவி வகிக்கும் ரமண சரஸ்வதி மாற்றப்பட்டு, அரியலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

19. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய நிர்வாக இயக்குநர் பிரபு சங்கர் மாற்றப்பட்டு, கரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

20. சென்னை மாநகராட்சி (பணிகள்) துணை ஆணையராகப் பதவி வகித்து மாற்றப்பட்ட மேகநாத ரெட்டி, விருதுநகர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

21. ஆதிதிராவிடர் வீட்டு வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் விஜயராணி மாற்றப்பட்டு, சென்னை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

22. தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் சந்திரகலா மாற்றப்பட்டு, தென்காசி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

23. தேனி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி மாற்றப்பட்டு ஈரோடு மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24. வணிகவரித்துறை (மாநில வரிகள்) கோயம்புத்தூர் மாவட்ட இணை ஆணையராகப் பதவி வகித்த காயத்ரி கிருஷ்ணன் மாற்றப்பட்டு, திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கண்ட உத்தரவை தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

Next Story