சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு


சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 13 Jun 2021 11:57 PM GMT (Updated: 2021-06-14T05:27:07+05:30)

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்களை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து, அரசு நிர்வாகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்த்து மொத்தம் 24 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 54 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கின்றனர்.

இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறி இருப்பதாவது:-

நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் பி.நாயர், ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சி இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன், சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் மாநில திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஏ.அண்ணாதுரை, வேளாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். வேலூர் மாவட்ட கலெக்டர் ஏ.சண்முக சுந்தரம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் எம்.பி.சிவன் அருள், பத்திரவுப்பதிவு ஐ.ஜி. ஆக மாற்றப்பட்டார். கோவை மாவட்ட கலெக்டர் எஸ்.நாகராஜன் நில நிர்வாக ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பி.பொன்னையா, நகராட்சி நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, சுற்றுலா இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். அவர் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும் பதவி வகிப்பார்.

வணிக வரிகள் கூடுதல் கமிஷனர் கே.லட்சுமி பிரியா, தொழில்நுட்ப கல்வி இயக்குனராக மாற்றப்பட்டு இருக்கிறார். நில அளவை மற்றும் செட்டில்மென்ட் ஆணையர் ஆர்.செல்வராஜ், பேரூராட்சிகள் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் மாநில திட்ட இயக்குனர் ஜி.லதா, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக மாற்றப்பட்டார். சேலத்தில் உள்ள தமிழ்நாடு கனிமவள மேலாண்மை இயக்குனர் ஆர்.பிருந்தா தேவி, தோட்டக்கலை மற்றும் பயிரீடு இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.

தொழிலாளர்கள் ஆணையர் எம்.வள்ளலார், வேளாண்மை சந்தையியல் மற்றும் வேளாண்மை தொழில் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். முதல்-அமைச்சரின் சிறப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ஏ.சரவணவேல்ராஜ், நகரமைப்பு இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.

சேலத்தில் உள்ள பட்டு வளர்ப்பு இயக்குனர் டி.ஜி.வினய், நில அளவை மற்றும் செட்டில்மென்ட் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார். மீன்வள கமிஷனர் மற்றும் தமிழ்நாடு மீன் வள மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெ.ஜெயகாந்தன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையராக மாற்றப்பட்டார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ரத்னா, சமூக நலன் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு உப்புக்கழக மேலாண்மை இயக்குனர் வி.அமுதவள்ளி, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.

மின் ஆளுமை குறைதீர்க்கும் பிரிவு சிறப்பு அதிகாரி கே.எஸ்.கந்தசாமி, பால் உற்பத்தி மற்றும் பால் வள மேம்பாட்டு இயக்குனராக மாற்றப்பட்டார். அவர் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குனராகவும் பணியாற்றுவார்.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை முன்னாள் இயக்குனர் டி.பாஸ்கர பாண்டியன், மாநில கொள்கை வளர்ச்சிக்குழு உறுப்பினர் செயலாளராக மாற்றப்பட்டார்.

விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பிய அன்சுல் மிஸ்ரா, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) உறுப்பினர் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். நில நிர்வாக கூடுதல் ஆணையர் மரியம் பல்லவி பல்தேவ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.

வேளாண்மை இயக்குனர் வி.தட்சணாமூர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். தஞ்சாவூர் கலெக்டர் எம்.கோவிந்தராவ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் முன்னாள் செயலாளர் எஸ்.விஜயராஜ்குமார், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.

பொதுத்துறை (தேர்தல்) இணை தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் இணை செயலாளர் அஜய் யாதவ் (ஜூனியர்), எல்கார்ட் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். பொதுத்துறை (தேர்தல்) இணை தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் இணை செயலாளர் டி.ஆனந்த், சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

உள்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இணை செயலாளர் டி.மணிகண்டன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

மதுரை டி.ஆர்.டி.ஏ. திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் கலெக்டர் (மேம்பாடு) பி.பிரியங்கா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குனராக மாற்றப்பட்டார். சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் உறுப்பினர் செயலர் சுங்சோங்கம் ஜடக் சிரு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குனர் கவிதா ராமு, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு குடிசைகள் மாற்று வாரிய இணை மேலாண்மை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் எஸ்.கோபால சுந்தரராஜ், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

வேளாண்மை சந்தையியல் மற்றும் வேளாண் தொழில்கள் இயக்குனர் கே.வி.முரளிதரன், தேனி மாவட்ட கலெக்டர் ஆனார். தமிழ்நாடு சாலை பிரிவு திட்டங்கள் இயக்குனர் ஏ.அருண் தம்புராஜ், நாகை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். பொதுத்துறை இணை செயலாளர் ஏ.ஆர்.ராகுல்நாத், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு சிமெண்ட் கழகம் மேலாண்மை இயக்குனர் எம்.ஆர்த்தி, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (சுகாதாரம்) ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.

‘டாஸ்மாக்’ முன்னாள் மேலாண்மை இயக்குனர் டி.மோகன், விழுப்புரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல இணை கமிஷனர் (மத்தியம்) பி.என்.ஸ்ரீதர், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். கோவை மாநகராட்சி கமிஷனர் பி.குமாரவேல் பாண்டியன், வேலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் பி.முருகேஷ், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் ஆனார்.

ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சி கூடுதல் இயக்குனர் அமர் குஷாவா, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) ஷ்ரேயா சிங், நாமக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். மதுரை மாநகராட்சி கமிஷனர் எஸ்.விசாகன், திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். தென்காசி மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (டான்ஜெட்கோ) இணை மேலாண்மை இயக்குனர் எஸ்.வினீத், திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் பி.ரமண சரஸ்வதி, அரியலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய செயல் இயக்குனர் பி.பிரபுசங்கர், கரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்) ஜே.மேகநாதரெட்டி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஆனார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீடுகள் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் ஜே.விஜயராணி, சென்னை மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக செயல் இயக்குனர் ஜி.யு.சந்திரகலா, தென்காசி மாவட்ட கலெக்டர் ஆனார். தேனி மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணன் உன்னி, ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனார். வணிக வரிகள் (மாநில வரிகள்) இணை கமிஷனர் பி.காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story