சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு


சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
x
தினத்தந்தி 14 Jun 2021 1:02 AM GMT (Updated: 14 Jun 2021 1:02 AM GMT)

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயர்ந்து உள்ளது.



சென்னை,


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர் ஏற்றம் கண்டு வருகிறது.

இதனால், வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்பு
அடைந்துள்ளனர்.  ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களின் குறிப்பிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது.

டீசல் விலையும் ராஜஸ்தானில் ரூ.100ஐ கடந்து விற்பனையாகி வருகிறது.  எரிபொருள் விலை உயர்வால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

பெட்ரோல் ரூ.97.43, டீசல் ரூ.91.64க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில், சென்னையில் கடந்த 2 நாட்களாக விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் இன்று விலை அதிகரித்து உள்ளது.

இதன்படி, பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் உயர்ந்து ரூ.97.69க்கும், டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து ரூ.91.92க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story