ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்: கி.வீரமணி


ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்: கி.வீரமணி
x
தினத்தந்தி 15 Jun 2021 11:34 PM GMT (Updated: 2021-06-16T05:04:41+05:30)

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதியில் பூமிக்கடியில் துளை போட்டு ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு ஏலம்விடும் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. அறிக்கையை எதிர்த்து, டெல்டா காவிரிப் படுகை விவசாயிகள் மீண்டும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு, ‘‘ஏல அறிவிப்பில் உள்ள அந்த டெல்டா பகுதியை நீக்க வேண்டும்” என்றும், ‘‘காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட விவசாயப் பகுதி என்பதால் கைவிட வேண்டும் என்றும்” வற்புறுத்தி, கடிதம் எழுதியுள்ளது வரவேற்கத்தக்கது.மேட்டூர் அணை திறக்கப்பட்டு, பல பகுதிகளில் தூர்வாரும் பணியும் செவ்வனே நடைபெற்று, விவசாயப் பணிகளில் டெல்டா விவசாயிகள் மும்முரமாக ஈடுபடவேண்டிய இந்த நேரத்தில், விவசாயிகளுக்கு வேதனை கண்ணீர் வருவதுபோன்ற செயலில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது. உடனடியாக இந்த அறிவிப்பினை திரும்பப்பெற வேண்டியது அவசரம், அவசியமாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story