முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனு: சென்னை ஐகோர்ட் தள்ளுபடி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Jun 2021 6:30 AM GMT (Updated: 2021-06-16T12:00:29+05:30)

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை, 

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட நடிகை சாந்தினி புகார் ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என ஐகோட்டில் நடிகை சாந்தினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகை தாக்கல் செய்த மனு நீதி மன்றத்திற்கு வராததால் இந்த வழக்கு விசாரணையை கடந்த 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது காவல் துறை தரப்பில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே மணிகண்டன் முன்ஜாமீன் மனுவை ஏற்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதாக கூறி, அவரது முன்ஜாமீன் மனுவை நீதிபதி அப்துல் குத்தூஸ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

Next Story