உடுமலையில் குடியிருப்பு பகுதியில் கிடந்த மருத்துவக்கழிவுகள்

உடுமலையில் குடியிருப்பு பகுதியில் கிடந்த மருத்துவக்கழிவுகள்
உடுமலை
உடுமலை உழவர்சந்தையில் இருந்து ராமசாமி நகருக்கு செல்லும் சாலையில் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் ரெயில்வே தண்டவாளம் பகுதிக்கான தளவாட பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை ஒட்டி நேற்று காலை பார்சல் சாப்பாடு பொட்டலம் குவியல் குவியலாக கிடந்தது. அவை பிளாஸ்டிக் கவரில் சாப்பாட்டு பொட்டலம் மற்றும் தனித்தனி கவர்களில் குழம்பு, ரசம், காய்கறி ஆகியவை போடப்பட்ட பார்சல்களாக கிடந்தன. அந்த சாப்பாட்டு குவியல்கள் கொட்டப்பட்டிருந்த இடத்தில் பயன்படுத்தப்பட்ட முக கவசங்கள் மற்றும் நோயாளிகளுக்கு ஊசி போடுவதற்கு பயன்படுத்தப்படும் சிரிஞ்ச் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளும் அதிக அளவில் கிடந்தன.
இதுகுறித்து நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அங்கு விரைந்து வந்து அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவ கழிவுகளை திறந்த வெளியில் போடுவதால் நோய் பரவக்கூடிய அபாயம் ஏற்படும். அதனால் உணவுபொருட்கள் குவியல் மற்றும் மருத்துவக்கழிவுகள் ஆகியவற்றை திறந்த வெளியில் கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story