வணிகவரி சார்ந்த புகார்களுக்கு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை - வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தகவல்

வணிகவரி சார்ந்த புகார்களுக்கு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் வணிகர்களுடன் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அலோசிப்பதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, வணிகவரி சார்ந்த புகார்களுக்கு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என்று தெரிவித்தார். போலியாக வணிக உரிமம் பெற்று இயங்கும் நிறுவனங்களை வணிகர்கள் யாரும் ஆதரிக்கக் கூடாது என்றும் போலி நிறுவனங்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story