திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வங்கி தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு 10-ந்தேதி தொடங்குகிறது


திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வங்கி தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு 10-ந்தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 19 Jun 2021 1:45 AM GMT (Updated: 2021-06-19T07:15:16+05:30)

திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில், வங்கி தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது.

திருச்செந்தூர், 

இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.பி.எஸ்.) நடத்தும் பொதுத்துறை வங்கி மற்றும் கிராமிய வங்கி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வருகிற 10-ந்தேதி (சனிக்கிழமை) முதல் ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.

கிராமிய வங்கியில் கிளார்க் பணிக்கான எழுத்து தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 28 வயது வரையிலானவர்கள் இத்தேர்வை எழுதலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 28-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

பொதுத்துறை வங்கி, கிராமிய வங்கி எழுத்து தேர்வில் வெற்றி பெற உதவும் வகையில், சிவந்தி அகாடமி சார்பில், ஆன்லைன் மூலம் வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படும். பயிற்சியின்போது 20 மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

பயிற்சியில் சேருகிறவர்களுக்கு வங்கி தேர்வுகளில் இடம்பெறும் பகுத்தாய்வு திறன், புதிர்கள், எண்கணித திறன், அளவீட்டு திறன், ஆங்கில மொழித்திறன், பொது அறிவு வினாக்கள், தரவு விளக்கங்கள் ஆகிய தலைப்புகளில் 7 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.

இந்த புத்தகங்கள் சிவந்தி அகாடமியின் சார்பில், பயிற்சி பெறுகிறவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க வல்லுனர்களால் ஆன்லைனில் நடத்தப்படும். பயிற்சி கட்டணம் ரூ.5,500 ஆகும்.

பயிற்சி வகுப்பில் சேர விரும்புகிறவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் தங்களது புகைப்படத்தை ஒட்டி, பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு எழுதி, அத்துடன் ரூ.5,500-க்கான வங்கி வரைவோலையை (கனரா வங்கி/ இந்தியன் ஓவர்சீஸ் வங்கி/ பாரத ஸ்டேட் வங்கி/ இந்தியன் வங்கி) ‘சிவந்தி அகாடமி, திருச்செந்தூர்’ என்ற பெயரில் எடுத்து ‘சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்-628216’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித்தரப்பட மாட்டாது. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகும். மேலும் விவரங்களுக்கு 04639-242998, 94420 55243, 86829 85148 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையா ராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story