உணவகங்கள், மளிகை, இறைச்சி, மீன் கடைகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்


உணவகங்கள், மளிகை, இறைச்சி, மீன் கடைகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 19 Jun 2021 11:01 AM GMT (Updated: 19 Jun 2021 11:01 AM GMT)

கடைகளில் பார்சல்களுக்குப் பயன்படுத்தப்படும் உறைகளை எடுக்கும் போது எச்சில் தொட்டு எடுப்பதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை மேலும் கட்டுப்படுத்துவதற்கான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

தற்போதைய சூழலில் உணவகங்களில் பார்சல் சேவை என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. அதே போல மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகளில் பாலித்தீன் கவர்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் நோய் பரவல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே கடைகளில் பார்சல்களுக்குப் பயன்படுத்தப்படும் உறைகளை எடுக்கும் போது எச்சில் தொட்டு எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் பாலித்தீன் உறைகளை திறக்கும் போது வாயால் ஊதுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைகளில் தொற்று பரவும் செயல்களை தவிர்க்க வேண்டும் எனவும், கடை ஊழியர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Next Story