தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்ததாக ஊரடங்கு உத்தரவில் என்னென்ன தளர்வுகளை அளிக்கலாம் என்பது பற்றி மருத்துவ குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்குமா என்பது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாக இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒருவாரத்திற்கு( நாளை முதல் 28 -ந்தேதி வரை) ஊரடங்கை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மூன்று வகையாக மாவட்டங்கள் பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில் சென்னை உட்பட 22 மாவட்டங்களில் மளிகை, பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம் என்றும் தொற்று குறையாத கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகள் தொடரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story