ஜூன் 21: சென்னையில் பெட்ரோல் ரூ.98.40, டீசல் ரூ.92.58க்கு விற்பனை


ஜூன் 21: சென்னையில் பெட்ரோல் ரூ.98.40, டீசல் ரூ.92.58க்கு விற்பனை
x
தினத்தந்தி 21 Jun 2021 1:02 AM GMT (Updated: 2021-06-21T06:32:54+05:30)

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 98.40 ரூபாய், டீசல் லிட்டருக்கு 92.58 ரூபாய் என விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னை,

தற்போது நாடு முழுவதும் வரலாறு காணாத விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வரி விதிப்பால் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.

இதனால் நேற்று வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாய் 2 பைசா மற்றும் 100 ரூபாய் 8 பைசாவுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94.11 மற்றும் 94.19 ரூபாய்க்கும், ஸ்பீடு பெட்ரோல் ரூ.103.21 மற்றும் ரூ.103.99-க்கும் விற்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மக்களின் அன்றாடப் பணிகளில் பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி மக்களின் அத்தியாவசிய தேவையான காய்கறி, மளிகை பொருட்கள், விலையும் உயரும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

தொடர்ந்து பெட்ரோல், டீசலின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது. குறிப்பாக அன்றாட கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இருசக்கர வாகனத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் இந்த விலை உயர்வுகாரணமாக கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 98.40 ரூபாய்க்கும், டீசல் 92.58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலையில் மாற்றமின்றி 98.40 ரூபாய்க்கும் , டீசல் விலையில் மாற்றமின்றி. 92.58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story