சென்னை, தற்காப்பு பயிற்சி ஆசிரியர் கெபிராஜ் மீது மேலும் ஒரு வழக்கு


சென்னை, தற்காப்பு பயிற்சி ஆசிரியர் கெபிராஜ் மீது மேலும் ஒரு வழக்கு
x
தினத்தந்தி 22 Jun 2021 5:28 AM GMT (Updated: 2021-06-22T11:04:01+05:30)

சென்னை, தற்காப்பு பயிற்சி ஆசிரியர் கெபிராஜ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை,

சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கெபிராஜ் என்பவர் பல்வேறு தனியார் பள்ளிகளில் கராத்தே, ஜூடோ உள்ளிட்ட  தற்காப்பு கலைகளுக்கான பகுதி நேர ஆசிரியராக இருந்து வந்துள்ளார். இவர் நடத்தி வந்த பயிற்சி பள்ளியில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூடோ பயிற்சிக்காக வந்த மாணவி ஒருவர், தொடர்ச்சியாக கெபிராஜிடம் தற்காப்பு கலை பயின்று வந்துள்ளார்.

இந்த நிலையில் தற்காப்பு கலை போட்டிகளுக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அழைத்துச் சென்ற போது அந்த மாணவியிடம் கெபிராஜ் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்திற்கு ஜூடோ போட்டிக்காக சென்றுவிட்டு திரும்பி காரில் வந்த போது அந்த இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி கெபிராஜ் பாலியல் தொந்தரவு செய்து உள்ளார்.

சமூக வலைதளங்கள் மூலம் அண்மையில் பல்வேறு தனியார் பள்ளிகளில் நடந்த பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான செய்திகள் பரவி வந்த நிலையில், அதனை பார்த்த அந்த மாணவி தற்போது முன்வந்து தற்காப்பு கலை ஆசிரியர் கெபிராஜ் மீது புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கெபிராஜ் கைது செய்யப்பட்டு வரும் 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

இந்த சூழ்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையின் அடிப்படையில் தற்போது தமிழ்நாடு டி.ஜி.பி. திரிபாதி, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், சென்னை, தற்காப்பு பயிற்சி ஆசிரியர் கெபிராஜ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக்கு வந்த பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக மின்னஞ்சல் மூலம் சி.பி.சி.ஐ.டி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சில ஆண்டுகளுக்கு முன் பயிற்சிக்கு சென்றபோது கெபிராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாத்க்கப்பட்ட அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

Next Story