மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: கூடுதல் கால அவகாசம் தேவை - தமிழக அரசு + "||" + Local elections Additional time required - Government of Tamil Nadu

உள்ளாட்சி தேர்தல்: கூடுதல் கால அவகாசம் தேவை - தமிழக அரசு

உள்ளாட்சி தேர்தல்: கூடுதல் கால அவகாசம் தேவை - தமிழக அரசு
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக பணிகளை முடிப்பதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையருக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக தமிழக அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனி அலுவலர் பதவிக்காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேரு, கே.ஆர். பெரியகருப்பன் சட்ட மசோதாக்களை பேரவையில் தாக்கல் செய்தனர்.

கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக மசோதாவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவான 9 மாவட்டங்களின் ஊராட்சிகளில் தனி அலுவலர் பதவிக்காலமும் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30-ம் தேதியுடன் தனி அலுவலர் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக வேட்பளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2. காஞ்சீபுரம் உள்ளாட்சி தேர்தல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
3. உள்ளாட்சி அமைப்புகளில் 27 பதவிகளுக்கான தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது- மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
உள்ளாட்சி அமைப்புகளில் 27 பதவிகளின் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
4. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? - இன்று மாலை அறிவிக்கிறது மாநில தேர்தல் ஆணையம்
சமீபத்தில் கூட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
5. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.