டாஸ்மாக் மூடல்: தஞ்சாவூரில் இருந்து அரியலூருக்கு படையெடுக்கும் மதுப்பிரியர்கள்...!


டாஸ்மாக் மூடல்: தஞ்சாவூரில் இருந்து அரியலூருக்கு படையெடுக்கும் மதுப்பிரியர்கள்...!
x
தினத்தந்தி 23 Jun 2021 7:35 AM GMT (Updated: 2021-06-23T13:05:02+05:30)

தஞ்சாவூரில் டாஸ்மாக்கடைகள் அடைக்கப்பட்டுதால் அங்கிருந்து அரியலூருக்கு மதுப்பிரியர்கள் படையெடுத்து மது வாங்கி செல்கின்றனர்.

அரியலூர்,

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக, அரசின் வழிகாட்டுதலின்படி ஊரடங்கு மாவட்டங்களில் உள்ள நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் 3 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1-ல் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்றும்  இந்த மாவட்டங்களில் டாஸ்மாக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக்கடைகள் அடைக்கப்பட்டுதால் திருச்சி, அரியலூர் எல்லைகளில் உள்ள மதுக்கடைக்களுக்கு மதுப்பிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் படையெடுத்து வருகை புரிகின்றனர். காலை முதல் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.

தஞ்சாவூரில் இருந்து மதுவாங்க வருபவர்களை போலீசார் தீவிரமாக கண்கானித்து வருகின்றனர். முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே மதுபாட்டில் வாங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

Next Story