போலீஸ் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் - கனிமொழி எம்.பி.,டுவீட்


போலீஸ் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் - கனிமொழி எம்.பி.,டுவீட்
x
தினத்தந்தி 23 Jun 2021 8:27 AM GMT (Updated: 2021-06-23T13:57:42+05:30)

சாமன்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என திமுக எம்.பி.,கனிமொழி கூறியுள்ளார்.

சென்னை,

சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின்போது காவலர் தாக்கியதில் முருகேசன் என்பவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தாக்குதல் நடத்திய எஸ்எஸ்ஐ கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக திமுக எம்.பி.,கனிமொழி டுவிட்டர் பதிவில்,

சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7 க்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும். நடப்பது திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Next Story