நாகை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனை நிறுத்தியதால் நோயாளி உயிரிழப்பு?

நாகை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாகை,
நாகை அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர் வங்கி ஊழியர் ராஜேஷ். இவருக்கு தொற்று பாதிப்பு அதிகமானதால் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 15க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதனிடையே அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்ட போது நோயாளிகளுக்கு ஆக்சிஜன் துண்டிப்பட்டதாகவும், கொரோனா தொற்று தீவீரமடைந்ததால் தான் ராஜேஷ் உயிரிழந்தார், ஆக்சிஜன் நிறுத்தம் காரணமல்ல. மற்ற நோயாளிகள் அனைவரும் நலமாக உள்ளதாக என மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.
Related Tags :
Next Story