உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக, முதல்-அமைச்சர் முடிவெடுப்பார்- அமைச்சர் கே.என்.நேரு

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக, முதல்-அமைச்சர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னை
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தெருவோர வியாபாரிகளுக்கு கடந்த ஆண்டை விட கூடுதலாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி முறைப்படி பெறப்படும்.
மாநகர திட்டங்களை நகராட்சி, மற்றும் பேரூராட்சிகளுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் .
பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, வீடுகளுக்கே சென்று குடிநீர் வழங்கும் திட்டம், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதலை பெற்று செயல்படுத்தப்படும்.
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக, முதலமைச்சர் முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story