தமிழகத்தில் இதுவரை 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு - மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில் இதுவரை 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு - மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 25 Jun 2021 8:57 AM GMT (Updated: 25 Jun 2021 8:57 AM GMT)

தமிழகத்தில் இதுவரை 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

 மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன் முடிவுகள் நேற்று இரவு வந்தது. சென்னை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதிபடுத்தப்பட்டது. அதில், மதுரையை சேர்ந்தவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், நேற்று இரவு முடிவு வந்தது. மற்ற இருவர் நலமுடன் உள்ளனர்.  தமிழகத்தில் இதுவரை 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பரிசோதனை செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும்
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு என்ற நிலை தற்போது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story