சிவசங்கர் பாபா டிஸ்சார்ஜ்: மீண்டும் சிறையில் அடைப்பு


சிவசங்கர் பாபா டிஸ்சார்ஜ்: மீண்டும் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 26 Jun 2021 4:51 PM IST (Updated: 26 Jun 2021 5:05 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவியருக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் தனியார்  பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் ஜூன் 16ஆம் நாள் டெல்லி அருகே சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதால் ஜூன் 18ஆம் நாள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை இருதயவியல் பிரிவில்  உள் நோயாளியாகச் சேர்க்கப்பட்டார்.

இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் அவரைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story