தமிழக நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை, பட்ஜெட்டுக்கு முன்பாக வெளியிடப்படும்" - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழக நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை, பட்ஜெட்டுக்கு முன்பாக வெளியிடப்படும்" என தமிழக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமைச்செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இணையளதத்தை இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- “ முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு வரும் தொகையை வெளிப்படையாக அறிவிக்க இணையதளம். இதன்மூலம் எளிதாக நிவாரண நிதியை செலுத்தவதுடன் செலவு குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். மே 6க்கு முன் வந்த நிதியை தனிக் கணக்காகவும், மே 7க்கு பின் வந்த நிதியை தனிக் கணக்காகவும் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பி.எம்-கேர்ஸ் நிதியில் எந்த வெளிப்படைத்தன்மையும் கிடையாது. முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு 2 மாதங்களில் சுமார் ரூ.472 கோடி வந்துள்ளது. அதிமுக ஆட்சியில் 14 மாதங்களில் பொது நிவாரண நிதிக்கு ரூ.400 கோடிதான் வந்துள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story