அமைச்சர் மனோ தங்கராஜுடன், ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி சந்திப்பு


அமைச்சர் மனோ தங்கராஜுடன், ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி சந்திப்பு
x
தினத்தந்தி 9 July 2021 11:25 PM IST (Updated: 9 July 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் மனோ தங்கராஜுடன், ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி சந்தித்து பேசினார்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜை, தென் இந்தியாவின் ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி சாரா கிர்லூ சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது தென் இந்தியாவின் ஆஸ்திரேலிய துணைத் தூதரக அதிகாரி மைக்கேல் கோஸ்டா, தகவல் தொழில் நுட்பவியல் துறை அரசு முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல் ஆகியோர் உடன் இருந்தனர்.
1 More update

Next Story