திருச்சியில் இருந்து ஐதராபாத்துக்கு நாளை மறுநாள் முதல் மீண்டும் விமான சேவை


திருச்சியில் இருந்து ஐதராபாத்துக்கு நாளை மறுநாள் முதல் மீண்டும் விமான சேவை
x
தினத்தந்தி 9 July 2021 11:36 PM GMT (Updated: 2021-07-10T05:06:48+05:30)

திருச்சியில் இருந்து ஐதராபாத்துக்கு நாளை மறுநாள் முதல் மீண்டும் விமான சேவை இயக்கப்பட உள்ளது.

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். தற்போது, உள்நாட்டு சேவைகளாக சென்னை, பெங்களூருக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்தநிலையில் ஊரடங்கு தளர்வு உள்ள காரணத்தினால் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ஐதராபாத் விமான சேவை நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல் இண்டிகோ நிறுவனம் சார்பில் இயக்கப்பட உள்ளது. இந்த விமானம் தினமும் மாலை 3.40 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டு மாைல 5.55 மணிக்கு திருச்சிக்கு வந்து சேரும். 

பின்னர் மாலை 6.40 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு இரவு 9.05 மணிக்கு ஐதராபாத்தை சென்றடையும். தற்போது இந்த விமானத்தில் பயணம் செய்வதற்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளது என்று விமான நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுபோல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் தோஹாவுக்கு விமான சேவை இயக்கப்பட உள்ளது. இந்த விமான சேவை, வாரத்தில் சனிக்கிழமை மட்டும் இயக்கப்படும். அன்று காலை 7.35 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானம் மீண்டும் காலை 8.35 மணிக்கு தோஹா நோக்கி செல்லும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story