ஜூலை 10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


ஜூலை 10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
x
தினத்தந்தி 10 July 2021 1:18 AM GMT (Updated: 2021-07-10T06:48:11+05:30)

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 101.67 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 101.37 ரூபாய், டீசல் லிட்டர் 94.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ 101.67 ஆகவும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ 94.39 ஆகவும் உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருப்பது இரு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story