பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை -அமைச்சர் அன்பில் மகேஷ்


பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை -அமைச்சர் அன்பில் மகேஷ்
x
தினத்தந்தி 10 July 2021 1:04 PM IST (Updated: 10 July 2021 1:04 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார்.


சென்னை

திருப்பத்தூரில் நடைபெற்ற கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும்  விழாவில் கலந்து கொள்ள வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த மாத இறுதிக்குள் பிளஸ் 2  மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறையுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டது உரிய ஆதாரத்துடன் தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளையும், கட்டமைப்புகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், வரும் பட்ஜெட்டில் கல்விக்கென புதிய திட்டங்கள் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.
1 More update

Next Story