மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவது சட்டத்திற்கு புறம்பானது - கே.எஸ்.அழகிரி


மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவது சட்டத்திற்கு புறம்பானது - கே.எஸ்.அழகிரி
x
தினத்தந்தி 12 July 2021 8:17 AM GMT (Updated: 2021-07-12T13:47:53+05:30)

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவது சட்டத்திற்கு புறம்பானது என்று தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

சென்னை,

மேகதாது அணைப் பிரச்சினை தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 13 கட்சிகளின் சார்பில் அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் அனைத்தும் தமிழகத்திற்கு சொந்தமானவை. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவது சட்டத்திற்கு புறம்பானது.

காவிரியில் கர்நாடகாவுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவு தமிழகத்திற்கு உள்ளது. தேசிய கட்சியாக இருந்தாலும், தமிழக நலன் கருதி தான் செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story