"சென்னையில் ஒரு வாரத்திற்கு பின் கோவாக்சின் தடுப்பூசி இன்று செலுத்தப்பட உள்ளது" - மாநகராட்சி அறிவிப்பு


சென்னையில் ஒரு வாரத்திற்கு பின் கோவாக்சின் தடுப்பூசி இன்று செலுத்தப்பட உள்ளது - மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 14 July 2021 4:49 AM GMT (Updated: 2021-07-14T10:19:06+05:30)

சென்னையில் ஒரு வாரத்திற்கு பின் கோவாக்சின் தடுப்பூசி இன்று செலுத்தப்பட உள்ளது என மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். 

சென்னையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் , 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது . 

இந்நிலையில் சென்னையில் ஒரு வாரத்துக்குப் பின் இன்று, கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தட்டுப்பாடு காரணமாக கோவாக்சின் போடப்படாத நிலையில், ஒரு மையத்தில் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 100 பேருக்கும், நேரடியாக வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் 100 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இது இரண்டாம் தவணை செலுத்துபவர்களுக்கு மட்டுமே போடப்படும் என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.

Next Story