தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய மந்திரியிடம் வலியுறுத்தப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய மந்திரியிடம் வலியுறுத்தப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 14 July 2021 9:02 AM GMT (Updated: 2021-07-14T14:32:28+05:30)

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய மந்திரியிடம் வலியுறுத்தப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை,

மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்திக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று டெல்லி செல்கின்றனர்.

அதற்கு முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கொரோனா தளர்வுகள் அளிக்கப்படும்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. திருமணம், இறுதி சடங்குகளில் பங்குபெற கட்டுப்பாடுகள், அரசியல் கூட்டங்களுக்கு தடை உள்ளிட்டவை பின்பற்றப்படுகிறது. இதை மக்கள் பின்பற்ற வேண்டும். அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்கள் மூலம் கொரோனா மூன்றாம் அலைக்கு வழிவகுப்பதை தவிர்க்க வேண்டும்.

செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்தில், எந்த நிறுவனம் தடுப்பூசி தயாரிக்கும் என்பது டெல்லி சென்ற பிறகு தான் தெரியும்.

டெல்லி செல்லும் அமைச்சர், தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி, நீட் தேர்வு விலக்கு, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் உள்ளிட்டவை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story