தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு குறைந்தது; புதிதாக 2,205 பேருக்கு தொற்று உறுதி


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு குறைந்தது; புதிதாக 2,205 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 17 July 2021 2:08 PM GMT (Updated: 17 July 2021 2:08 PM GMT)

தமிழகத்தில் கொரோனா வைரசால் 2,205 பேர் பாதிக்கப்பட்டு நேற்றுடனான ஒப்பீட்டு அளவில் எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது.


சென்னை,

தமிழக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 2,205 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்து உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இது நேற்றுடன் (2,312 பேர்) ஒப்பிடும்போது குறைவாகும்.

இதனால், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,33,323 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,45,814 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  இதுவரை 3,54,14,538 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று மட்டும் 43 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  நேற்றுடனான ஒப்பீட்டு அளவில் (46 பேர்) சற்று குறைந்துள்ளது.  இதனால், கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 33,695 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் மட்டும் 137 பேர் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவிலிருந்து 2,802 பேர் இன்று குணமடைந்தனர்.  24,71,038 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  28,590 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்து உள்ளது.  நேற்றுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது.


Next Story