கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 19 July 2021 12:55 PM GMT (Updated: 2021-07-19T18:25:47+05:30)

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் என்பது மக்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அபாயம் நீங்கி விட்டதாக கருதக்கூடாது. 3-வது அலை வரக்கூடாது. ஆனால் கண்டிப்பாக வரும் என்றே ஐ.சி.எம்.ஆர். மற்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் மற்றும் 80 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள் போதிய அளவில் கட்டுக்குள் இருப்பதாகவும் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மூன்றாவது அலை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் முதல்-அமைச்சருடன் ஆலோசனை செய்த பின் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Next Story