தமிழக அமைச்சர் துரைமுருகன் மீது சாதிய வன்கொடுமை புகார்


தமிழக அமைச்சர் துரைமுருகன் மீது சாதிய வன்கொடுமை புகார்
x
தினத்தந்தி 20 July 2021 11:07 AM GMT (Updated: 2021-07-20T16:37:15+05:30)

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது சாதிய வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர்: 

வேலூர் மாவட்டம் சேர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது டெல்லியிலுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், நில அபகரிப்பு, சாதிய வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேலூர் மாவட்ட கலெக்டர்,  போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Next Story